ராமநாதபுரம், செப். 2 –
தமுமுக வின் 31-வது ஆண்டு தொடக்க விழா ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் பனைக்குளம் தமுமுக கிளை கழகம் சார்பாக கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தமுமுக மாவட்ட பொருளாளர் பனைக்குளம் அசன் தலைமையில் நடைபெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உத்தரவின் அடிப்படையில் தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா வழிகாட்டலில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அஸ்ஸாம், மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிஃப்ரி, மாணவரணி மண்டல செயலாளர் முஹம்மது பஹாத், மாணவரணி மாவட்ட செயலாளர் முஹம்மது யாசிர், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முகவை கமால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கழகத்தின் கொடியை பனைக்குளம் தமுமுக கிளையின் ஆரம்ப கால தலைவர் செய்யது முஹம்மது ஏற்றி வைத்தார் .
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தமுமுக கிளை தலைவர் முஹம்மது அஸ்ரார், தமுமுக செயலாளர் முஹம்மது ஆசிக், மமக செயலாளர் பாசித், துணை செயலாளர்கள் சுஹைல், ஹபீப் ரஹ்மான், மஹாதிர், பாஸித், ஹசீப் அஹமது, சஹாதத்துல்லா ஆகியோர் செய்திருந்தனர். தமுமுக வின் 31-வது தொடக்க ஆண்டை கொண்டாடும் விதமாக 31 ஏழை குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் உணவு, இனிப்பு வழங்கப்பட்டது.
கிளை தலைவர் அஸ்ரார் அஹமது நன்றி கூறினார்.



