நாகர்கோவில், அக்டோபர் 28 –
மோந்தா புயல் எச்சரிக்கை காரணமாக ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ரயில் எண் 17235 எஸ்எம்விடி பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் எஸ்எம் விடி பெங்களூரில் இருந்து 29ம் தேதி (நாளை) மாலை 5: 15 மணிக்கு புறப்படுவது முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 22503 கன்னியாகுமரி – திப்ரூகார் விவேக் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து நேற்று புறப்பட்டது. விஜயவாடா, வாராங்கல், பல் கர்ஷா, சந்தா போர்ட், பிலாஸ்பூர், ஜர்சுகுடா, ரூர்கே லா, டாட்டா நகர், காரக்பூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.


