நாகர்கோவில் – மே 02,
கன்னியாகுமரி மாவட்டம் சகாய நகர் ஊராட்சிக்குட்பட்ட அனந்த பத்மநாபபுரம், சண்முகபுரம் , குறுக்கால் மடம் பகுதியில் வசிக்கும் ஏழை தொழிலாளர்களுக்கு யூனிக்கோ டிரஸ்ட் மூலமாக முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தர்மர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைத் தொழிலாளர்களுக்கு மே தினத்தை முன்னிட்டு நேற்று உணவு, உடைவழங்கி தொழிலாளர்களை கௌரவப்படுத்தப்பட்டது அது போன்று தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் உணவு உடைகள் வழங்கப்பட்டன இளைஞர்களுக்கு டீ சர்ட் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் யூனிக்கோ டிரஸ்ட் உரிமையாளர் தர்மர் மற்றும் குடும்பத்தினர் ஊர்பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் , தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு தொழிலாளர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மே – 1சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யூனிக்கோ டிரஸ்ட் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கௌரவிப்பு.

Leave a comment