பரமக்குடி, ஏப்.18: பரமக்குடியில், சொத்து தகராறு முன் விரோதம் காரணமாக பெண் ஆசிரியை இழிவுபடுத்தி சுவரொட்டி ஒட்டியதாக பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மாவட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் தங்கராஜ் (66) , அவருக்கும் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் வேலுச்சாமி மற்றும் அவரது மகன் குகன், குகன் மாமனார் பாண்டியன் ஆகியோரிடம் சொத்து தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இது சம்மந்தமாக கடந்த மே.7 ஆம் தேதி பரமக்குடி அரசு மருத்துவமனையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில், தங்கராஜ், உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைப்போல், தங்கராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாண்டியன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கராஜின் மகன் சுரேஷ் பாபு ராமநாதபுரம் மாவட்ட பாஜக பொருளாதார பிரிவு அணியில் மாவட்ட தலைவராக உள்ளார். பாண்டியன் தரப்பை சேர்ந்த குகன் மற்றும் அவரது மனைவி தேன்மொழி இருவரும் அரசு ஆசிரியராக பணியாற்று வரும் நிலையில், பொதுவெளியில் அசிங்கப்படுத்த வேண்டும், அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், ரவுடியாக மாறிய ஆசிரியர்கள் என குறிப்பிட்டு, கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் சுவரொட்டிகள் பரமக்குடி ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டது. இதனால், மனம் உடைந்த ஆசிரியை, விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதுகுறித்து ஆசிரியையின் கணவர் குகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சுரேஷ்பாபு, தங்கராஜ், தங்கராஜ் மனைவி ஜீவா,பிரபு ஆகியோர் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரிந்து தலைமறைவானார். போலீசார் தேடி வந்த நிலையில், மதுரையிலிருந்து சுரேஷ்பாபுவை பரமக்குடி போலீசார் கைது செய்து பரமக்குடி அழைத்து வந்தனர். பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சுரேஷ்பாபு வரும் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டனர்.இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்
ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.



