நாகர்கோவில் மே 8
குமரி மாவட்டம் முளகுமூடு மறை வட்ட முதன்மைப் பணியாளராக அருட்தந்தை டேவிட் மைக்கேல் பதவியேற்பு தூய மரியன்னை பசிலிக்காவில் நடைபெற்றது. முளகுமூடு மறை மாவட்ட தலைமை ஆலயமான தூய மரியன்னை பசிலிக்காவின் குழித்துறை மறை மாவட்ட புதிய முதன்மை பணியாளர் சேவியர் பெனடிக் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் குழித்துறை மறை மாவட்டத்தின் முளகுமூடு மறை வட்ட முதன்மை பணியாளராக பொறுப்பேற்ற அருள்முனைவர் டேவிட் மைக்கேல்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ரத்தினகுமார், அரோக்கியராஜன், வட்டார தலைவர் வழக்கறிஞர் ஜெபா, மாவட்ட செயலாளர் மில்லர் மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், மறைவட்ட பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முளகுமூடு மறை வட்ட முதன்மைப் பணியாளராக அருட்தந்தை டேவிட் மைக்கேல் பதவியேற்பு: விஜய் வசந்த் எம் பி நேரில் வாழ்த்து

Leave a comment