தருமபுரி, ஆக. 7 –
தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் ராஜகோபால் கவுண்டர் பூங்காவில் இருந்து நான்கு ரோடு வரை பேரணியாக சென்று அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இதை தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இதில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி, நகர மன்ற தலைவி லட்சுமி நாட்டான் மாது, நகரக் கழகச் செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட பொருளாளர் தங்கமணி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.