முதுகுளத்தூர், ஆகஸ்ட் 3 –
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மருதகநல்லூர் கிராமம் இந்த கிராமத்தின் வழியாக பகம்பொன் தேவர் ஆலயம் செல்ல 1 கி.மீ தூரம் ஆகும். கமுதி சுற்றி சென்றால் 10 கி.மீ தூரம் ஆகும். தேவர் ஆலயத்திற்கு பொதுமக்கள் தினந்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து செல்கின்றனர். அனைத்து மக்களும் இந்த மருதகநல்லூர் கிராமத்தின் வழியாகவே செல்கின்றனர்.
மருதகநல்லூர் விலக்கில் கமுதி நெடுஞ்சாலைத்துறை சார்பில் கிராமத்தின் பெயர் பலகை வைக்கப்படாததால் பொதுமக்கள் வழி தெரியாமல் தவிக்கின்றனர். ஆகையால் கமுதி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் மூலம் மருதகநல்லூர் கிராம பெயர் பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.