ஈரோடு, நவ. 24 –
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (மாலை) கோவையில் இருந்து கார் மூலம் ஈரோடு வருகிறார். அவருக்கு விஜயமங்கலம் சுங்க சாவடி பெருந்துறை மேட்டுக்கடை ஆகிய இடங்களில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதன் பிறகு ஈரோடு காளிங்கராயன் விடுதியில் கட்சி நிர்வாகிகளை மு க ஸ்டாலின் சந்திக்கிறார்.
இதன் பிறகு நாளை காலை மொடக்குறிச்சி ஜெயராம புரத்தில் கட்டப்பட்டு உள்ள சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் சிலையை திறந்து வைக்கும் அவர் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதையடுத்து சோலார் புதிய பஸ் நிலைய வளாகத்தில் ரூ. 605 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை திறந்து வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 1 லட்சத்து 84 ஆயிரத்து 491 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
இதன் பிறகு மதியம் ஈரோடு காளிங்கராயன் இல்லத்தில் மதிய உணவு சாப்பிடும் அவர் மாலையில் சித்தோடு ஆவின் நிறுவனத்தில் முன்னாள் எம் பி பரமசிவன் சிலையை திறந்து வைக்கிறார். இதன் பிறகு சித்தோட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதன் பிறகு கார் மூலம் கோவை செல்லும் அவர் அங்கு இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.



