மதுரை, செப்டம்பர் 19 –
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவ சேவையில் லீட் 4.0 பிளாட்டினம் சான்றிதழைப் பெறும் முதல் இந்திய மருத்துவமனை என்ற கவுரவமிக்க அந்தஸ்தை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அடைந்திருக்கிறது.
மேலும் கட்டிடங்களுக்கு உட்புறத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்தி இயற்கையான வெளிச்சத்தை அதிகமாக்குகிற முற்போக்கான வடிவமைப்பு உத்திகளை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தனது வளாக கட்டிடங்களில் இடம் பெறச் செய்திருக்கிறது. இயற்கையுடன் நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகளிலும் ஒருங்கிணைந்து முன்னேற்றம் காணமுடியும் என்பதை இம்மருத்துவமனையின் சாதனை நிரூபித்து நம் நாடெங்கிலும் உள்ள மருத்துவமனைகள் செயல்படுத்தக்கூடிய ஒரு மாதிரியை வழங்கியிருக்கிறது.
பெருமைக்குரிய இந்நிகழ்வில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் குருசங்கர் உரையாற்றுகையில், “குணமாக்குதல் என்பது மருந்துகள் மற்றும் சிகிச்சை என்பதையும் கடந்த ஒரு மேலான அம்சம் என்பதில் நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது. ஒரு மருத்துவமனையானது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதோடு தனது செயல்பாட்டை சுருக்கிக் கொள்ளாமல் நாம் வாழும் இந்த பூமியை பாதுகாப்பதிலும், முன்னேற்றத்திற்கு உத்வேகமளிப்பதிலும் சிறப்பான பங்களிப்பை வழங்குவது அவசியம்.
சுகாதார கட்டமைப்பில் நமது நாடு தொடர்ந்து வளர்ந்து வருகின்ற நிலையில் எமது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த லீட் பிளாட்டினம் சான்றிதழ், தொடர்ந்து புதுமையான உத்திகளை கண்டறிந்து செயல்படுத்த எங்களுக்கு உத்வேகம் அளிக்கும்; சுற்றுச்சூழலை பேணுவதில் பாதுகாவலாக செயல்பட வேண்டுமென்ற உற்சாகத்தையும், ஊக்கத்தையும் இச்சான்றிதழ் எங்களுக்கு வழங்கியிருக்கிறது. பிற மருத்துவமனைகளும் பின்பற்றக்கூடிய ஒரு மாதிரியை நிறுவியிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று குறிப்பிட்டார்.


