தேனி, செப். 18 –
மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் (மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கம்) காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தால் 11.10.2025 அன்று நடத்தப்பட உள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பத்துள்ள தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் பொருட்டு இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 20.09.2025 மற்றும் 27.09.2025 மற்றும் 04.10.2025 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்து தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பயிற்சி வகுப்பில் சேர்வது தொடர்பாக தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 63792 68661 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.



