கோவில்பட்டி, ஜூன் 26 –
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, கயத்தாறு யூனியன் உள்பட்ட கெச்சிலாபுரம் கிராமத்தில் ஊர் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
அதனை மக்கள் பயன்பாட்டுக்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பஞ்சாயத்து துணைத் தலைவர் சுந்தர லட்சுமி தலைமை வகித்தார். வேலாயுதபுரம் திமுக சங்கர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் சாலமன் முன்னிலை வகித்தார்கள். செந்தில் மள்ளர் வரவேற்றார்.
தெற்கு கழுகுமலை திமுக கிளை செயலாளர் திரு ராஜா, திமுக ஒன்றிய பிரதிநிதி முத்து கண்ணன், திமுக இளைஞர் அணி பாலமுருகன், ராஜா புதுக் குடியை சேர்ந்த பால்ராஜ், சதீஷ்குமார் மற்றும் ஊர் நாட்டாமைகள், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாட்டினை கெச்சிலாபுரம் திமுக கிளைச் செயலாளர் வெள்ளத்துரை செய்திருந்தார்.