மார்த்தாண்டம், செப். 25 –
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரி ஒருவரின் மகள் குழித்துறை அரசு பெண்கள் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த மாணவியை ஒரு தலையாக காதலித்து தினமும் மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று மாணவி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது பைக்கில் அந்த வாலிபர் சென்று மாணவியை வழி மறித்து தகராறு செய்துள்ளார்.
மேலும் தன்னை திருமணம் செய்யவும், வேறு யாரையாவது திருமணம் செய்தால் கொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளார். இது குறித்து மாணவியின் தந்தை மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.


