மார்த்தாண்டம், ஆக. 3 –
மார்த்தாண்டத்தை அடுத்த பாகோடு தேனாம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜான் ததேயு மனைவி சஜிதா (38). இவர் தனது பழுதடைந்த தாலி செயினை சரி செய்வதற்காக தாலியை ஒரு பார்சில் வைத்து பையில் எடுத்து சென்றுள்ளார். ஊரில் இருந்து ஆட்டோவில் மார்த்தாண்டம் வந்த அவர் பின்னர் நாகர்கோவில் செல்லும் பஸ்சில் ஏறி கல்லுத்தொட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கி உள்ளார். அதன் பிறகு பர்சை பார்த்த போது நகை மாயமாகி இருந்தது. பல இடங்களில் தேடியும் அவரது பர்ஸ் கிடைக்கவில்லை.
இதை அடுத்து சஜிதா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மாயமானது குறித்து விசாரித்து வருகின்றனர். பஸ்சில் பயணம் செய்த போது, கூட்டத்தை பயன்படுத்தி யாராவது எடுத்து சென்றார்களா? அல்லது வேறு எங்காவது தவறியதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.