மார்த்தாண்டம், நவ. 18 –
மார்த்தாண்டம் நட்டாலம் படிச்சவிளையை சேர்ந்தவர் பிலிப்போஸ் மகன் அனீஷ் குமார்(33), ஆட்டோ டிரைவர் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அவர் சம்பவத்தன்று வீட்டின் அருகாமையில் உள்ள குறையான் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். வெகு நேரமான பின்பும் அவர் திரும்பி வரவில்லை.
இதையடுத்து குளத்தில் சென்று பார்த்த போது அவரது செருப்பு மற்றும் துணிகள் வெளியே இருந்துள்ளது. பின்னர் குளத்தில் இறங்கி பார்த்தபோது அவர் மூழ்கி மரணமடைந்தது தெரிய வந்தது.
இதை அடுத்து மார்த்தாண்டம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து அவரது சகோதரர் சுனில் குமார் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


