மதுரை, அக். 09 –
மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற 11.10.2025 அன்று குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் முற்பகல் 10.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. மேற்படி முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் / நகல் அட்டை கோருதல் / கைப்பேசி எண்பதிவு மாற்றம், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து புகார்கள் மற்றும் இதர குறைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் நேரடியாக முகாம் அலுவலரிடம் வழங்கி தீர்வுகள் பெற்றுக்கொள்ளலாம் என மதுரை மாவட்ட குடிமைப் பொருள் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


