திருப்பரங்குன்றம், அக். 13 –
மதுரை பெருங்குடி பகுதியில் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை முறைகேடாக மாற்றியது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது
பழங்குடியினர் தமிழர் இயக்கம் தலைவர் சிவநரேந்திரன் பேசியதாவது: மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியில் பழங்குடியின குறவர் சமூகத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை முறைகேடாக மாற்று சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட இ-பட்டாவை உடனடியாக ரத்து செய்யக்கோரி வருவாய்த்துறை மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இந்தப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 250 பழங்குடியின குறவர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா தமிழக அரசால் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு மாற்று சமுதாயத்தினருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாற்று சமுதாயத்தினர் தங்களை அச்சுறுத்துவதாக கூறி பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் நாங்கள் பழங்குடி மரபு கொண்டவர்கள். எங்களுக்கு 2016 இல் இந்த பெருங்குடி பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா கொடுத்தார்கள். இப்போது வரை எங்களுடைய மக்கள் இங்கு 250 குடும்பம் வசித்து வருகிறோம். திடீரென்று 2023இல் வேறு ஒரு சமுதாயத்திற்கு இங்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் நேற்று எங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் இந்த பகுதி 2016 இல் இருந்து 250 பேர் நாங்கள் இருப்பதால் எந்த அடிப்படையில் வேறு சமூகத்திற்கு இங்கு பட்டா கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இங்கு பழங்குடியில் இருப்பதால் வேறு ஒரு சமூகத்தினர் ஒன்றிணைந்து பயணிக்க மாட்டார்கள். இப்பொழுது குடித்திருப்பது விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த பிரமுகர்கள் அப்படி இருக்கும்போது இங்கு ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். இரண்டாவது மக்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். அதனால் இங்கு மக்கள் அச்சப்படுத்துகிறார்கள்.
நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளோம் நேர்முகமாக சந்தித்துள்ளோம். ஆனாலும் இதுவரை எந்த தீர்வு இல்லை. அதனால் இன்று எங்கள் பிரச்சனையை மையப்படுத்துவதற்கு அந்த வீடு சமூகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்ய சொல்லி நாங்கள் உணவகாரத்திற்கு உட்கார்ந்து இருக்கிறோம். எங்களுக்கு சரியான தீர்வு வருவாய்த்துறையும் ஆதிதிராவிடர் நலத்துறை எடுக்கும்வரையும் எங்கள் உண்ணாவிரதத்தை தீர்க்கப் போவதாக இல்லை. அதனால் எங்கள் மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை இந்த உண்ணாவிரதம் மூலமாக எங்களுக்கு கண்டிப்பான முறையில் தீர்வு வேண்டும். அதனால் இங்கு ஒட்டுமொத்த மக்களும் ஒருங்கிணைந்து பழங்குடி தமிழர் இயக்கம் சார்பாக போராட்டம் நடத்தி வருகிறோம்.
மேலும் இதை நாங்கள் தொடர் உண்ணாவிரதமாக தொடர போகிறோம். எங்களுக்கு
இந்த பிரச்சனை ஒரே நாளில் தீர்வதற்கு வாய்ப்பில்லை. அதனால் பிரச்சனை தீரும் வரை இந்த உண்ணாவிரதம் நீடிக்கும். எங்களுக்கு 2016 இல் கொடுக்கப்பட்ட பட்டாவை நடைமுறையாக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் கொடுக்கப்பட்ட பட்டாவை உடனடியாக ரத்து பண்ண வேண்டும் என்று கூறினார்.


