மதுரை, ஜூன் 07-
மதுரை நகர், விஸ்வநாதபுரத்தில் உள்ள பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்று புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கட்டடத்தை திறந்து வைத்தார்.
மதுரை நகரில் விஸ்வநாதபுரம் பகுதியில் பாலமந்திரம் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலமந்திரம் துவக்கப்பள்ளி ஆகிய இரு பள்ளிகள் (இரு பாலர்கள் படிக்கும் பள்ளிகள்) ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன. மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கௌவரத் தலைவராகவும், மதுரை மாநகராட்சி மேயர் கௌரவ துணைத் தலைவராகவும் கொண்டு இந்த பள்ளிகள் இயங்கி வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டித் தரும் பொருட்டு
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் ரூபாய்.1.17 கோடி நிதி ஒதுக்கீடு கடந்த 2024 மார்ச் மாதத்தில் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. 6 வகுப்பறைகள் (தரைத் தளத்தில் 3 ம், முதல் தளத்தில் 3 ம்) அனைத்து வசதிகளுடனும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் சாய்தளம் (RAMP) அமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடத்திற்கென தனியே மின் இணைப்பு மற்றும் மோட்டார் பம்ப் ஆகியவையகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளியில் பயிலும் குழந்தைகள் நலனுக்காக TVS குழுமத்தைச் சேர்ந்த தத்தாத்ரேயா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் (DATTATREYA Textiles Pvt., LTD., Madurai) புதியதாகக் கழிப்பறைக் கட்டிடம் சுமார் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டிக் கொடுத்துள்ளது. இதே போன்று சுந்தரம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் (SUNDARAM Textiles Pvt., Ltd.,) சுமார் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மேசை மற்றும் அமரும் இருக்கைகள் 150 எண்ணிக்கையில் வழங்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்.
மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர். இந்திராணி மதுரை வருவாய் கோட்டாட்சியர்.
ர.த.ஷாலினி, பள்ளியின் செயலாளர் ஆர்.சோமசுந்தரம். பொருளாளர் ஆர்.சீனிவாசன். உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.