மதுரை, ஜூலை 28 –
மதுரை செல்லூர் பந்தல்குடி பகுதியில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் குடிநீர் குழாய் மற்றும் குழாய் அடி தளம் அமைத்து கொடுத்ததை முன்னிட்டு அதனை நேரில் பார்வையிட சென்ற அதிமுக மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் பா. சரவணன் Ex.MLA -வை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.அதனைத் தொடர்ந்து அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அப்பகுதியில் மரக்கன்றுகள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.