மதுரை மே 6,
மதுரையில் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு நீர் சத்து குறைவு போன்ற பாதிப்புக்கு உள்ளாகி வரும் நோயாளிகளுக்கு ஏ. சி. வார்டு தொடங்கப்பட்டுள்ளது. வெயிலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஏ. சி. வார்டு தொடங்கப்பட்டுள்ளது. வெயில் தாங்க முடியாமல் சிகிச்சைக்கு வருவோருக்கு 10 படுக்கைகளுடன் குளிரூட்டப்பட்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வார்டில் வென்டிலேட்டர், ரத்த பரிசோதனை உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மதுரை அரசு மருத்துவமனை தோல் நோய் பிரிவு துணைத் தலைவர் டாக்டர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியது
கொளுத்தும் கோடை வெயிலில் தலையில் அதிக முடி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதற்கு பதிலாக சம்மர் கட்டு எனப்படும் தலைமுடியை ஒட்ட வெட்டலாம் தலையில் அதிக முடி இருந்தால் வியர்வை துவாரங்கள் அடைபட்டு சீல் கொப்புளம் வேனல் கட்டி உருவாகலாம் என்றார். இதனால் பொதுமக்கள் குழந்தைகள் பெரியோர்கள் அனைவரும் தற்போது வெயில் கொளுத்தி வரும் வேளையில் தங்கள் தலை முடிகளை அதிகம் வைத்துக் கொள்வதை தவிர்த்து சம்மர் கட்டு செய்து கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.