மதுரை, ஆகஸ்ட் 11 –
மதுரை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில்
மதுரை மாவட்ட தடகள அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெற்று வரும் இந்த போட்டியினை தமிழ்நாடு அத்லெடிக் அசோசியேசன் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் லதா, மதுரை மாவட்ட அத்தலடிக் அசோசியேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன், இணைச் செயலாளர் உஸ்மான் அலி ஆகியோர் போட்டியினை துவக்கி வைத்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர். இந்த போட்டியில், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தடகள போட்டியானது 14, 16, 18 வயதுக்குட்பட்டோர் மற்றும் 20 வயதுக்குட்பட்டோர் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தனர்.
தொடர்ந்து போட்டிகளில் சிறந்த வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்து பாண்டிச்சேரி நடைபெற உள்ள தேசிய தடகள போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு அத்லெடிக் அசோசியேசன் செயலாளர் லதா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்
தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் மதுரை மாவட்ட தடகள சங்கம் இணைந்து மூன்று நாட்கள் தடகள போட்டி நடத்தி அதில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து பாண்டிச்சேரியில் நடைபெற உள்ள தடகள போட்டிக்கு அனுப்பி வைக்க உள்ளோம். வீரர் வீராங்கனைகள் புதிய சாதனை புரிந்து வருகிறார்கள். குறிப்பாக மாநில அளவில் வீரர் கவீன் என்பவர் நீளம் தாண்டுதலில் 5 மீட்டர் தாண்டி புதிய சாதனை புரிந்துள்ளார். இதே போல நிறைய வீரர்கள் புதய சாதனை புரிந்து வருகிறார்கள் என்று கூறினார்.



