போடி செப் 10:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி 21 வது வார்டு பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் தூய்மையே விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை வைத்து தெருக்களில் உள்ள குப்பைகளை கூட்டி அள்ளும் தூய்மை பணியாளர் போல மக்கள் சேவை செய்தார் இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர் கா. ராஜலட்சுமி பொறியாளர் வி .குணசேகரன் நகர் மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி நகராட்சி நகர் மன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எம் சங்கர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்