கோவை, ஜூலை 26 –
முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2025-2026 கான பொள்ளாச்சி (வடக்கு, கிழக்கு) ஒன்றிய ஆச்சிபட்டி ஊராட்சி 7 வது வார்டு சேரன் நகர் பகுதியில் இருந்து போஸ்டல் காலனி சந்திப்பு வரை 450 மீட்டர் சுமார் 14,89,000 மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி அவர்கள் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியை கோவை தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சேரன் நகர்சுரேஷ் ஏற்பாடு செய்திருந்தார். பொள்ளாச்சி வடக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பொருளாளர் ஜெயபிரகாஷ், பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன், சரவணன், ஆனந்த், தேவேந்திரன், சக்திவேல், மகாலட்சுமி, நல்லதாய், கார்த்திகேயன், சண்முகம், மோகன் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.