கோவை மே-11
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, அடுத்த ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா,பான் மசாலா, கஞ்சா, போன்ற போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் தனி போலீசார் பலகட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் அடிப்படையில் வால்பாறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி உத்தரவின் பேரில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் நேற்று நல் இரவுவில் தாத்தூர் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்ட வந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரைபிடித்து விசாரணை செய்ததில் பீகரை சேர்ந்த முகம்மது சகாப்தீன் (50) ஆரிப் ராஜா (20) கல்லூரி மாணவர்வர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பீகாரில் இருந்து ரயில் மூலம் கஞ்சா வாங்கிக்கொண்டு கோவையில் இறங்கி இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திக் கொண்டு வந்து தெரியவந்தது பொள்ளாச்சி வழியாக கேரளாவில் விற்பனை செய்வதற்கு கொண்டு செல்வதாக தெரிய வந்தது சுமார் 8.400 கிலோ கஞ்சாவும் 3.100 கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முகமது சகாப்தின் மீது காக்க சாவடி பகுதியில் கேரளாவிற்கு கடத்த முயற்சி செய்த ஏழு கிலோ ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் வழக்கில் தந்தை மகன் கைது செய்தது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது
பொள்ளாச்சி அருகே கஞ்சா சாக்லேட் கடத்திய தந்தை மகன் கைது ஆனைமலை போலீசார் அதிரடி!!!!!!!
Leave a comment