கோவை, ஜூலை 08 –
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் கே.நித்தியானந்தன் சென்னை தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பொள்ளாச்சியை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு அளித்தார்.
மேலும் பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பல பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் PAP பாசன திட்டத்தில் குழாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படும் கால்வாய் சீரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூ 4500 கோடி ரூபாய் நிதி ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்தற்கு விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சியை போல் கோபியை தலைமை இடமாகக் கொண்டும், ஆத்தூரை தலைமை இடமாகக் கொண்டும் மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தியுள்ளார்.



