திருவெண்ணெய்நல்லூர், ஆக. 25 –
திருவெண்ணெய்நல்லூர் திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி கிருஷ்ணராஜ் தலைமையில் பொன்.கௌதம சிகாமணி பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.கௌதம சிகாமணி 51-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் நிர்வாகிகள் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து பெற்றனர். இதில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் விக்னேஷ், மூகாம்பிகை நாராயணன், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தர், குமரவேல், திருநாவுக்கரசு, பவித்ரன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் ஆசைத்தம்பி, பரிமளம், விஜயரங்கம், மேகநாதன், சேகர், முகமது ராஜா, அபூபக்கர், சுலைமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



