திருவட்டார், ஆக. 12 –
பொன்மனை பேருராட்சிக்கு உட்பட்ட பொன்மனை என்.எஸ் கரயோகத்தில் வைத்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. பொன்மனை பேருராட்சி தலைவர் அகஸ்டின் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். செயல் அலுவலர் வினிதா, துணை தலைவர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவட்டார் வட்டாச்சியர் மரகதவல்லி, சமூக நல பாதுகாப்பு துறை தனி வட்டாச்சியர் சரளகுமாரி, சுருளகோடு சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் அருண் சந்தோஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள் ராஜ், பேருராட்சி கவுன்சிலர்கள், சுகாதார பணியாளர்கள், பேருராட்சி ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தாசில்தார் மரகதவல்லி பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை ஆய்வு செய்தார்.
46 துறைகள் உள்ளடக்கி 64 சேவைகள் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. அனைத்து துறை அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொன்மனை பேருராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். பொன்மனை பேருராட்சி நிர்வாகம் இதற்கான விரிவான ஏற்பாடு செய்திருந்தனர்.



