பூதப்பாண்டி, ஆகஸ்ட் 03 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள அழகிய பாண்டியபுரம் காஸ்பல் நகர் பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் சாஜின் (22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கும் முன் பகை இருந்துள்ளது. இதன் காரணமாக அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (30) என்பவர் சாஜினுடைய பைக்கை எரித்ததாகவும் அதை தட்டி கேட்கும் போது அருண் குமாரும் அவருடைய அம்மா செல்வகுமாரி (50) இருவரும் சேர்ந்து மிரட்டியதாக சாஜின் கொடுத்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் தாய் மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.