தஞ்சாவூர் மார்ச் 19.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை ,பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 625 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்தனர் அந்த மனுக்களை பெற்று அவர் உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த7மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 7 இலட்சத்து 35ஆயிரம் மதிப்பில் பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள், வனத்துறை சார்பில் மரவள்ளி கிழங்கு பயிரி னை காட்டுப்பன்றி சேதப்படுத்திய தற்காக செங்கிப்பட்டி சேர்ந்த விவசாயிக்கு ரூபாய் 7500 கான காசோலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்
அப்போது மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் சங்கர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.



