திருப்பத்தூர்:அக்:06, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற இயக்கத்தின் சார்பில் நடைப்பெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையிலும், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை , ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.விலவநாதன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. உடன் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் தனபதி, மேனாள் மாவட்ட பால் வளத்துறைத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் K.A.குணசேகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.



