பூதப்பாண்டி, செப்டம்பர் 15 –
பூதப்பாண்டி பேரூராட்சியில் ஆதி திராவிடர் நலன் அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத்திட்டம் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் பூதப்பாண்டி அரசு மருத்துவமனை சமீபம் இருந்து பட்டார் குளம் காலனி வரை கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை பேருராட்சி தலைவர் ஆலிவர் தாஸ் தொடங்கி வைத்தார். உடன் துணைத் தலைவர் அனில் குமார், கவுன்சிலர்கள் யூனுஸ் பாபு, ஜெஸ்ஸி தம்பி அசாருதீன், கிளைச் செயலாளர் ராஜன், ஒன்றிய பிரதிநிதி சகரியா, விவசாய அணி கோபாலன், வழக்கறிஞர் பலவேசமுத்து, ஒப்பந்ததாரர் நடராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



