பூதப்பாண்டி, ஆகஸ்ட் 05 –
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் பூதப்பாண்டி பேரூராட்சி சார்பாக திட்டுவிளையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பேரூராட்சி உதவி இயக்குனர் ராமலிங்கம், பூதப்பாண்டி பேருராட்சி செயல் அலுவலர் சந்தோஷ் குமார் மற்றும் மருத்துவர் பிரிட்டோ சீன், துயர் துடைப்பு தாசில்தார் தாஸ், தோவாளை தாசில்தார் கோலப்பன், வருவாய் அலுவலர் சுப்பிரமணி, தாழக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷிக், வட்ட வழங்கல் அலுவலர் ஸ்டெல்லா மேரி மற்றும் திமுக (கி) மாவட்ட துணை செயலாளர் கரோலின் ஆலிவர் தாஸ், பூதப்பாண்டி பேரூராட்சி துணைத்தலைவர் அணில் குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் மரியஅற்புதம் , யூனிஷ் பாபு, அசாருதீன், முருகன் பிள்ளை, ஜெசி தம்பி, நபீலா அன்சார், ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டார்கள். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்று சென்றனர்.



