நாகர்கோவில், அக். 6 –
கன்னியாகுமரி அருகே உள்ள புத்தளம் எல்.எம்.பி.சி உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் 1977- 1978 ஆம் ஆண்டில் பயின்ற 10 ம் வகுப்பு முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து ஒருவரை ஒருவர் பார்த்து பழைய பள்ளி கால நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர் பெருமக்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இதில் குடும்பத்தினருடன் வந்திருந்த முன்னாள் மாணவர்கள் நலம் விசாரித்துக் கொண்டனர். பின்னர் இது குறித்து பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூறுகையில் “நாங்கள் இப்போது 50 ஆண்டுகளுக்கு மேலாக மீண்டும் ஒன்றாக சந்தித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பள்ளியில் பயின்ற அனைவரும் பல்வேறு துறைகளில் உள்ளனர். அரசு அதிகாரியாகவும்,பெரிய தொழிலதிபர்களாவும் உள்ளனர்.
மேலும் அடுத்த தலைமுறை நன்றாக படியாக தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருவதாகவும் இன்று 55 இன்ச் கலர் டிவி ஸ்மார்ட் வகுப்பிற்கு வழங்கி உள்ளதாக தெரிவித்தனர். மேலும் தங்களுடன் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் இறந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலியை இன்று நாங்கள் பயின்ற பள்ளி வகுப்பறையில் ஒன்றாக சேர்ந்து அஞ்சலி செலுத்தி உள்ளதாகவும் ஒரே வகுப்பறையில் மீண்டும் 50 ஆண்டுகளுக்கு பிறகு கூடியது அந்த காலத்திற்கு கொண்டு சென்றதாக ஆனந்தத்துடன் தெரிவித்தனர்.



