சுசீந்திரம், அக். 2 –
புத்தளம் அருகே உள்ள வடக்குதேரிவிளையை சேர்ந்தவர் ஜோசப் (46). இவர் புத்தளத்தில் உள்ள எல்.எம்.பி.சி மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று புத்தளம் அருகே உள்ள வடக்கு தேரிவிளையை சேர்ந்த சாம் கிளாட்லின் (20) என்பவர் ஜோசப்பை பார்த்து எதுக்குடா என் வீட்டிற்கு வந்தாய் என் அம்மாவிடம் என்ன பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கெட்ட வார்த்தை பேசி விட்டு பின்னர் கைபேசியை எடுத்து போன் செய்தவுடன் கண்டால் தெரியும் மூன்று நபர்கள் வந்து ஜோசப்பை கையாலும் காலாலும் அடித்தும் மிதித்தும் இரும்பு ஆயுதங்களை வைத்து தலையில் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். படுகாயம் அடைந்த ஜோசப் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கிருந்து ஜோசப் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் கிளாட்லின் மற்றும் கண்டால் தெரியும் 3 பேர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.


