விளாத்திகுளம், செப்டம்பர் 27 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூரில் நடைபெற்ற அதிமுக பூத்பாகம் வார்டு கழக நிர்வாகிகள், ஆன்லைன் நிர்வாகிகள் நேரில் ஒருங்கிணைந்து பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜீ கலந்து கொண்டு கலந்து கொண்டு பேசுகையில் இனி 5 அமாவாசை மட்டும் தான் உள்ளது 6 வது அம்மாவாசை முடிந்த பின் பௌர்ணமியாக மாறி நாட்டு மக்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய ஒளி விளக்கு தரக்கூடிய 2026-ல் அதிமுக ஆட்சி தான் அமையும் என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அதிமுக புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவருமான தனஞ்ஜெயன் மற்றும் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி மற்றும் நகர செயலாளர் ஆண்டி ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்எல்ஏ மோகன், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மண்டல துணைச் செயலாளர் கருப்பசாமி, விளாத்திகுளம் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவர் மோகன், சிறுபான்மை பிரிவு சதீஷ் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.



