புதுக்கடை, செப். 8 –
புதுக்கடையில் இருந்து விரிவிளை செல்லும் சாலையோரம் சுந்தர் என்பவர் இளநீர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று காலை அவரது மனைவி மற்றும் மகன் இருக்கும் போது அங்கு வந்த வெறிநாய் ஒன்று அவரது மனைவி மற்றும் மகனை துரத்தி கடிக்க முயன்றுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் கடையில் இருந்து ஓடி அருகில் இருந்த வீட்டில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் மீண்டும் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த இருவரை வெறிநாய் கடித்து விரட்டி உள்ளது. இதில் ஒருவர் ஓடியபோது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். தொடர்ந்து அந்த நாய் அங்கிருந்து தப்பி சென்றது.
இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி சுற்றித்திரியும் இந்த நாயை பேருராட்சி நிர்வாகம் உடனடியாக பிடித்து கருணை கொலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் வெறிநாய் பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



