புதுக்கடை, செப். 1 –
கருங்கல் அருகே பாலப் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜாண் ஜெயக்குமார் (51). இவர் தனியார் கல்லூரி பேராசிரியராக உள்ளார். சம்பவ தினம் இவர் தனது பைக்கில் கருங்கல் – தேங்கா பட்டணம் சாலையில் செந்தறை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக்குடன் மோதியது. இதில் பேராசிரியர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அது போன்று மோதிய பைக்கை ஓட்டிய கீழ்குளம் பகுதி சேகர் , பின்னால் இருந்த நெல்சன் ஆகியோரும் படுகாயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு, பேராசிரியர் ஜாண் ஜெயக்குமார் காஞ்சிர கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேகர், நெல்சன் ஆகியோர் படுகாயத்துடன் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையிலும், சிகிட்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


