சுசீந்திரம், ஜீலை 18 –
கன்னியாகுமரி மாவட்டம் புதுகிராமம் கற்பக விநாயகர் திருக்கோயிலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நல்லாட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழக சட்டமன்ற அறிவிப்பு 2023-24ம் ஆண்டின் படி கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ. 13.50 லட்சம் திருக்கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. இதன் துவக்க விழா குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் சூப்பிரண்டு ஆனந்த், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், ஸ்ரீகாரியம் கண்ணன், பேரூர் கழக செயலாளர் முத்து, கவுன்சிலர் எட்வர்ட்ராஜ், ஆறுமுகம், ஒன்றிய பிரதிநிதிகள் பழனிவேல், தம்புரான், திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர் அருண்காந்த், கிளை செயலாளர்கள் கற்பகபெருமாள், சுரேஷ் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதுகிராமம் பெருமாள் கோயில் அருகே பக்தர்கள் கோரிக்கை ஏற்று புதிய சுகாதார வளாகம் அமைக்கும் பணிகள் ரூ. 7.80 லட்சம் செலவில் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் நடந்தது.