நாகர்கோவில் மே 16
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் மேல்கரை பகுதியை சேர்ந்த மணிகண்டன் 21 என்பவர் நாகர்கோவிலில் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் . அதில் கூறியிருப்பதாவது :- நான் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறேன் . என் கல்விக்காக ஆன் லைன் செயலி மூலம் 1960 ரூபாய் கடனாக பெற்று பின் சர்வீஸ் தொகையும் சேர்த்து 4000 ரூபாய் கட்டி முடித்து விட்டேன். என் கடன் முடிந்தது இருந்தாலும் மேலும் மேலும் பணம் கட்ட சொல்லி செயலி குரூப்பில் உள்ளவர்கள் கட்டாய படுத்தியும் மிரட்டியும் வந்தார்கள். நான் முழு கடனும் கட்டிவிட்டதால் மேல் படி பணம் கட்டவில்லை எனவே அந்த மர்ம கும்பல் என் வாட்ஸ் அப் மூலம் என் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து மார்பிங் மூலம் அநாகரிகமாக என் படத்தை சித்தரித்து என் குடும்ப உறுப்பினர்கள் வாட்ஸ் அப் குருப்புகளில் அனுப்பி உள்ளார்கள்.. இதன் மூலம் மனம் உடைந்து விட்டேன் என்றும் சம்பந்தபட்ட மர்ம கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.