பூதப்பாண்டி, ஆகஸ்ட் 14 –
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி மோனிஷா. குழந்தை பிரவசத்திற்காக பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் 13-ம் தேதிஅனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாக தங்கியிருந்த அவருக்கு நேற்று காலை 11.00 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையின் வலது கை மற்றும் காலில் முறிவு ஏற்ப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நான் எனது மனைவி கற்பம் ஆனதிலிருந்து எல்லா மாதமும் முறையாக அங்கு வந்து மருத்துவ பரிசோதனை செய்தேன். அப்போது மருத்துவர்கள் எந்த குறையும் கூறவில்லை. நேற்று குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் கை மற்றும் கால் முறிவு குறித்து கூறுகிறார்கள். இது அங்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் அலட்சியமே காரணம் என குழந்தையின் தந்தை பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



