தருமபுரி, ஆகஸ்ட் 14 –
தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் இணைந்து ராஷ்ட்ரிய கோகுல் மிஷின் திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் அதியமான் அரண்மனை கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆவின் பொது மேலாளர் மாலதி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மரிய சுந்தர், ஆவின் மேலாளர்கள் மணிவண்ணன், சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் ரமாதேவி வரவேற்றார். இந்த கருத்தரங்கில் முன்னாள் ஆவின் பொது மேலாளர் உலகநாதன், பேராசிரியர்கள் விஜயகுமார், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பம் மூலம் பால் உற்பத்தியை பெருக்குவது குறித்து விளக்கிப் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் விரிவாக்க அலுவலர் பெரியசாமி நன்றி கூறினார்.



