தருமபுரி, ஜூலை 7 –
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தின் கீழ் 75 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழ செடித் தொகுப்புகள் மற்றும் பயிறு வகைத் தொகுப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் வழங்கினார். காய்கறி விதைத் தொகுப்பில் ( தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கீரை வகைகள், கொத்தவரை) பல செடித் தொகுப்பில் (கொய்யா, பப்பாளி, எலுமிச்சை) மற்றும் பயிறு வகை தொகுப்பில் (அவரை, காராமணி, மரத்து வரை) உள்ளிட்டவற்றை 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை இணை இயக்குனர் சித்ரா, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை துணை இயக்குனர் பாத்திமா, உதவி இயக்குனர் சக்திவேல், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.