தருமபுரி, செப்டம்பர் 01 –
தருமபுரி மாவட்டம் பாப்பாரபட்டி அருகே அண்ணா நகர் பகுதியில் ஆதரவற்ற பச்சை (90) என்கின்ற வயதான மூதாட்டி ஓலை குடிசை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் ஓலை வீடு முற்றிலும் சேதமடைந்தது. வேறு வழியில்லாமல் இருந்தார். அப்பகுதில் இருந்த ஒரு சில இளைஞர்கள் அவரின் அவலத்தை பாரத்து வீடியோ எடுத்து சமுக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனை பார்த்த பாப்பாரபட்டி தவெக நகர செயலாளர் ரமேஷ் என்பவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்து வரும் இவர் தனது நண்பர்களுடன் அங்கு சென்று பார்த்து விட்டு மூதாட்டிக்கு உடடியாக போர்வை, தலையனை, பாத்திரங்கள், உணவு பொட்டலங்களை கொடுத்துவிட்டு விரைவில் புதியதாக வீடு கட்டி கொடுக்கிறோம் என வாக்குறுதி அளித்து விட்டு வந்தனர்.
அதனை தொடர்ந்து ரமேஷ் நண்பர்களுடன் சேர்ந்து அங்கிருந்த இடிந்த நிலையில் இருந்த ஓலை வீட்டை அப்புறப்படுத்தி விட்டு சுமார் 1.5 இலட்சம் மதிப்பில் சிறியதாக வீட்டை கட்டி கொடுத்துள்ளனர். இந்த வீட்டில் பேன், லைட், மின்விசிறி மற்றும் சமையல் அறை உள்ளிட்ட அத்யாவாசிய பொருட்களுன் சேர்த்து வீட்டை கட்டி முடித்து இன்று மூதாட்டியிடம் சாவியை ஒப்படைத்தனர். ஆதரவற்ற மூதாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டதால் சந்தோசமடைந்த மூதாட்டி அவர்களைப் பாராட்டினார். அந்த புதிய வீட்டிற்கு தளபதி அன்பு இல்லம் என பெயர் வைக்க மூதாட்டி சம்மதமும் தெரிவித்தார். ஆதரவற்ற மூதாட்டிக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய வீடு கட்டி கொடுக்கப்பட்டதை கண்டு அப்பகுதியில் உள்ள பொது மக்கள் கட்சி நிர்வாகிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.



