மயிலாடுதுறை, செப். 29 –
மயிலாடுதுறையில் சேந்தங்குடி வடபாதி பகுதியில் வசிப்பவர் ஏசுதாஸ் மகன் இன்பராஜ் (45). இவர் கடந்த 25 வருடத்திற்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வருகிறார். பல்வேறு பொருப்புகளிலும் இருந்துள்ளார். இவரை தற்போது மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவராக இருக்கும் நாஞ்சில் பாலு கட்சியிலிருந்து நீக்கி உள்ளார். இதை அறிந்த இன்பராஜ் என்னை கட்சியிலிருந்து எதற்காக நீக்கினீர்கள் என நாஞ்சில் பாலுவை கேட்ட போது: நீ என்ன பெரிய ஆளா போடா என்று சாதியின் பெயரை சொல்லி திட்டி தாக்கி உள்ளார்.
அவருடன் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன், விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் வாஞ்சிநாதன் ஆகியோர் சேர்ந்து இன்பராஜை திட்டி தாக்கி உள்ளனர். இதனால் படுகாயமடைந்த இன்பராஜ் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அறிந்த மயிலாடுதுறை காவல் துறையினர் இன்பராஜை தாக்கிய மூவர் மீதும், தரக்குறைவாக பேசியது, காயம் ஏற்படுத்தியது, சாதியை சொல்லி திட்டியது என ஆறு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து மூவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.



