விளாத்திகுளம், ஆகஸ்ட் 13 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டில் பகுதியில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பொது நிதியின் கீழ் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் சிறிய பாலம் அமைக்கும் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் பணியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் பேரூராட்சிக்குப்பட்ட 12-வது வார்டு துளசிப்பட்டியில் மாநில சிறப்பு நிதியின் கீழ் ரூபாய் 28.50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக்சாலை அமைக்கும் பணியையும் பூமி பூஜை செய்து சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அயன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, அன்புராஜன், இம்மானுவேல் உட்பட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



