By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தூத்துக்குடியில் 40 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடியில் 40 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்பு
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடியில் 40 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்பு

Last updated: August 29, 2024 6:48 pm
August 29, 2024
704 Views
Share
SHARE

தூத்துக்குடியில் 40 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்பு : மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தனியாாிடமிருந்த 40 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார். 

 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஜெ.எஸ். நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, வரவேற்றார். 

 

இதில், பிறப்பு இறப்பு சான்றிதழ் முகவாி மாற்றம், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு கட்டடி அனுமதி உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட பின் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின் அவரது உத்தரவிற்கிணங்க மழை நீர் தேங்கிய பகுதியில் புதிய கால்வாய் பணிகள் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊராட்சி உள்ளிட்ட புறநகர் பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின்படி குறை கேட்பு முகாம் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் முகாம் நடைபெறுகிறது.

ஏற்கனவே நடைபெற்ற மண்டலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைக்க பெற்றுள்ளது. அதனடிப்படையில் இந்த பணிகள் தொடர்கின்றன. குறிப்பாக சொத்துவாி குடிதண்ணீர் வகையில் பெயர் மாற்றம் முகவாி மாற்றம் போன்ற குறைபாடுகள் உள்ள மனுக்களுக்கு உடனடியாக இங்கு தீர்வு காணப்படுகிறது. இதுவரை மாநகராட்சி பகுதியில் 2500 புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதியில் புதிய கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் சாலையை பொறுத்தவரை கல்லூாி பள்ளி மருத்துவமனை கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த பணி நடைபெறுகிறது. 

இங்கு சாலை கால்வாய் போன்றவைகளுக்கு கொடுக்கப்படும் மனுக்களுக்கு எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை ஆய்வு மேற்கொண்டு அது படிப்படியாக நிறைவேற்றப்படும் முத்தையாபுரம் உப்பாற்று ஓடை முழுமையாக ஒருபுறம் 300 மீட்டரும் மறுபுரம் 180 மீட்டரும் அகலம் கொண்டதாகும் அதை முழுமையாக சீரமைத்து மழை காலங்களில் வரும் தேவையற்ற நீரை கடலுக்குள் செல்லும் வகையில் பணிகள் நடைபெறுகிறது. அப்பகுதியில் மணல் அாிப்பை தடுப்பதற்கு மரங்கள் நடுவதும் குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். அத்திரமரப்பட்டி முள்ளக்காடு பகுதி மக்கள் விடுத்த கோாிக்கையடுத்து ஜே.எஸ் .நகாில் ஒரு பூங்கா வரவுள்ளது. 

 

அதே போல் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் அதற்கான தேர்வு பணிகள் நடைபெறுகிறது. இந்த பகுதியில் தேவையற்ற இடங்கள் ஏதுவும் இருந்தால் பொதுமக்கள் தகவல் தொிவிக்கலாம் ஏற்கனவே மாநகராட்சி பகுதியில் தனியார் வசம் ஆக்கிரமித்து வைத்து இருந்த 40 கோடி மதிப்பிலான இடம் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதன்கிழமை தோறும் எல்லா மண்டலங்களிலும் குறைதீா்க்கும் முகாம் நடைபெறும் விடுமுறை நாட்களாக இருந்தால் மட்டும் மறுநாள் வியாழக்கிழமை நடைபெறும் இந்த பகுதியில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள 153 மனுக்களில் 115 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. 

அதிலும் குறிப்பாக கட்டிட அனுதிக்கென்று கொடுக்கப்பட்ட 22 மனுக்களில் 9 மனுக்களுக்கு மட்டும் தீர்வு காணப்படாத நிலை யுள்ளது. அதற்கு தகுந்த ஆவணங்களை முறையாக இணைத்து வழங்கினார். அதை முறைப்படுத்தி முறையாக வழங்கப்படும் எந்த பணிகளுக்கும் ரசீது இல்லாமல் யாாிடமும் எதுவும் கொடுக்க வேண்டாம். வீடு கட்டும் போது குடிநீர் இணைப்புகும் விண்ணப்பித்து உடனடியாக இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். அனைத்து பணிகளும் நோ்மையாக நடைபெறுகிறது என்று பேசினார்.

மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், தொழிற்சங்க செயலாளர் அனல்டேவிட், அளித்த கோாிக்கை மனுவில் பிரையண்ட் நகர் பகுதி கட்டபொம்மன் நகா் நான்கு முக்கு சந்திப்பில் அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்வதால் போதிய மின்விளக்கு வசதி இல்லாத நிலை இருந்து வருகிறது, உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தரவேண்டும் புதிய தார்சாலை போடப்பட்ட இருபகுதிகளிலும் சரல் மண் அடித்து சமப்படுத்த வேண்டும். 

 

மழை நீர் வடிகால் அமைத்து தரவேண்டும்் அதே போல் கட்டமொம்மன்நகர் நான்கு முக்கு சந்திப்பில் புதிய தார்சாலை அமைக்கப்பட்ட பின் வேகத்தடை அமைக்கபபடாமல் இருக்கிறது அதை உடனடியாக அமைத்து கொடுத்து விபத்தை தடுக்க வேண்டும். உள்ளிட்ட கோாிக்கையை முன் வைத்து மனு அளித்தனர். பிறப்பு சான்றிதழ் விண்ணப்பித்த பெண் ஒருவருக்கு 15 நிமிடத்தில் அச்சான்றிதழை மேயர் ஜெகன் பொியசாமி வழங்கினாா். மற்றொரு பெண் நீண்ட நாள் கோாிக்கையை உடனடியாக தீர்த்து வைக்க உத்தரவிட்டார். இருவரும் மனமகிழ்ச்சியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தொிவித்தனர்.

நிகழ்ச்சியில் துணை ஆணையா் ராஜாராம், பொறியாளா் சரவணன், உதவி ஆணையர் கல்யாண சுந்தரம், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், கண்காணிப்பு அலுவலர் குருவையா, நகா்நல அலுவலர் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, கவுன்சிலா்கள் வைதேகி, சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், சுயம்பு, ராஜேந்திரன், முத்துவேல், அதிமுக கவுன்சிலர் வெற்றிச்செல்வன், வடக்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி துைண அமைப்பாளா் விஜயகுமார், வட்டச்செயலாளர்கள் நடேசன் டேனியல், பிரசாந்த், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ராபின், மாநகர நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கண்டனம்.
அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் புனரமைப்பு பணி!!
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்குழு
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

வலங்கபுலிசமுத்திரம் கிராம நியாய விலை கடை திறப்புராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஸ்ரீகுமார் பங்கேறபு

May 25, 2025
32 Views
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்
ஊத்தங்கரையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்‌
செந்துறை டூ இலங்கைச்சேரி மண் சாலையை தார் சாலையாக விரைவாக அமைக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சிவகங்கை அருகே கொல்லங்குடியில் புரவி எடுப்பு விழா, பூச்சொரிதல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account