கிருஷ்ணகிரி, ஜுன் 30 –
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பர்கூர் வட்டாட்சியர் அலுவலகம் முதல் காவல் நிலையம் வரை பேரணி நடைபெற்றது. பேரணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி. நாகராஜன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பி.டி. அன்பரசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.டி. பாலன், மாவட்ட பிரதிநிதி கே. காந்தி, பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார், பர்கூர் நகர செயலாளர் பி.சி வெங்கட்டப்பன், பர்கூர் பேரூராட்சி அவை தலைவர் இளங்கோவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தாபா சங்கர், பர்கூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைசாமி, ஆகாஷ், ஜான் ஜோசுதாஸ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, இ.ஆர். ராமன், பர்கூர் வடக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர், மாவட்ட பிரதிநிதி வெங்கடாசாமி, கொண்டப்ப நாயக்கனப்பள்ளி கோவிந்தராஜ், அச்சமங்கலம் மார்ட்டின் சுற்றுச்சூழல் அணி பர்கூர் வடக்கு, பர்கூர் பேரூராட்சி துணைத் தலைவர் வசந்த் குமார், சிவகார்த்திகேயன் மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் பி.கே. ரமேஷ், திமுக பிரமுகர் ஆர். ராஜேஷ், பிரபு கிருஷ்ணா உள்பட 1200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பர்கூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பர்கூர் டிஎஸ்பி, பர்கூர், இன்ஸ்பெக்டர்மற்றும் எஸ்ஐ, காவலர்கள் உள்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.