பூதப்பாண்டி, ஆகஸ்ட் 09 –
பூதப்பாண்டி அருகேயுள்ள ஈசாந்திமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் முன்புள்ள பன மூட்டு அம்மன் கோவில் முன்பு இரண்டு பனைமரங்கள் இருந்தன. இதில் ஒரு பனைமரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் பெய்த மழை மற்றும் பலத்த காற்றினால் முறிந்து விழுந்தது. இதனை வருவாய் துறையினர் வெட்டி அலுவலக பகுதியில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அங்கு நின்ற மற்றொரு பனை மரத்தினை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி வைக்கப்பட்டிருந்த பனைமரத்தினையும் திருடி சென்றதாக ஈசாந்திமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஹேமா பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.