சுசீந்திரம், ஜூலை 27 –
சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனிஸ் லியோன் தலைமையில் போலீசார் இலந்த விளைப் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது இலந்தவிளை துறை தென்னந்தோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாடிய பள்ளம் பகுதியை சார்ந்த ராமச்சந்திரன் (56), இலந்த விளைப் பகுதியைச் சார்ந்த திருப்புகழ் (49), அதே பகுதியைச் சார்ந்த செல்லையா (70), நைனார் புதுர் பகுதியைச் சார்ந்த விக்னேஷ் (27), நைனார் புதூர் பகுதியைச் சார்ந்த அனந்தராஜன் (49) ஆகியோர் எந்த அனுமதியும் இன்றி தென்னந்தோப்பில் வைத்து சூதாடியதை கண்டுபிடித்து ஐந்து பேரையும் கைது செய்து சுசீந்திரம் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


