களியக்காவிளை, டிச. 26 –
கேரளா மாநிலம் கொல்லம் கோவூர்சேதுபவனம் சேதுநாத் இவரது மகன் அனூப் (36), திருமணம் ஆகவில்லை. இவர் படந்தாலூமூடு சோதனை சாவடி அருகே உள்ள இறால் பண்ணையில் கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு குளிப்பதற்கு பாத்ரூமில் சென்றவர் வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் காலையில் சென்று பார்க்கும்போது கதவு பூட்டிய நிலையில் காணப்பட்டது.
கதவு உடைத்து பார்க்கும் போது இறந்த நிலையில் காணப்பட்டார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இறுதி முடிவு பிரேத பரிசோதனையில் தெரிய வரும் என கூறப்படுகிறது. இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


