ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, சத்திரம், பிலிகுண்டுலு உள்ளிட்ட காவிரி ஆற்றுப்பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான முதலைகள் தண்ணீரில் வாழ்கின்றன. ஆற்றில் நீர்வரத்து குறைவு காரணமாக ஆங்காங்கே தண்ணீர் இல்லாமல் வறண்டு வெறும் பாறைகளாகவே தென்படுகின்றன. இதனால் ஆற்றில் உள்ள முதலைகள், சுற்றுலா பயணிகள் சென்று சுற்றிப் பார்க்கக் கூடிய ஐந்தருவி, முதலைப்பண்ணை, ஆலம்பாடி, சத்திரம் பகுதிகளில் உலா வருவதால் மக்கள் அச்சமடைகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முன்பு ஒற்றை முதலை ஒன்று சுற்றி திரிந்ததால், இதனைக்கண்ட சுற்றுலா பயணிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே கடந்த காலங்களில் காவிரி கரையில் உள்ள முதலைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதால் இங்குள்ள முதலைகள், மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது.



